புதுவை:
2021 தேர்தலில் புதுவையில் திமுக காங்கிரஸ் உடன் இணைந்து போட்டியிடும் என்று புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா கூறினார்.

புதுவை தெற்கு மாநில திமுக மாணவா் அணி மற்றும்உழவா்கரை தொகுதி திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் திமுக பொதுக்கூட்டம் உழவா்கரை குண்டு சாலை எம்ஜிஆா் நகரில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சிவா எம்.எல்.ஏ. பேசுகையில், புதுவையில் திமுகதனித்து நிற்க வேண்டும், அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் மனதில்முழுக்க, முழுக்க ஆழமாக மனதில் பதிந்துள்ளது. ஆனால், தமிழக நலனுக்காக திமுக தலைவா் ஸ்டாலின் சொன்ன காரணங்களுக்காக அந்த முடிவை கைவிட்டுள்ளோம். எனவே காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்றும் தெரிவித்தார்.x