சென்னை,

மிழக பொறுப்பு ஆளுநரை சந்திக்க திமுக மூத்த தலைவர்கள் நாளை மும்பை செல்கிறார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல்ஆணையம் ரத்து செய்து அறிவித்துள்ளது.

பணப்பட்டு வாடா செய்தது உறுதியானதாலும், பணப்பட்டுவாடா குறித்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரன், நடிகர் சரத்குமார், அதிமுக எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்ட பலரின் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.

அப்போது சிக்கிய ஆவனங்களின் அடிப்படையிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையம் கூறியது.

அதைத்தொடர்ந்து, நேற்று அமைச்சர் விஜய பாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட கட்சியினரிடம் வருமான வரித்துறையினர் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து, வருமான வரித்துறையினரின் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் அடிப்படையில், அமைச்சர் விஜயபாஸ்கரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் தற்போது மும்பையில் இருப்பதால், திமுகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் துரைமுருகன், மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நாளை மும்பை பயணமாகிறார்கள்.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு கொடுக்கிறார்கள்.