ஆர்.கே.நகரில் தி.மு.க.வுக்கு தோல்வி இல்லை….ஸ்டாலின்

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு தோல்வி இல்லை. தேர்தல் ஆணையத்திற்கு தான் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆர்கே நகர் தேர்தல் முடிவு குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் இமாலய தோல்வி அடைந்துள்ளது. திமுகவுக்கு தோல்வி இல்லை.

தேர்தல் ஆணையத்திற்கு தான். வாக்காளர்களுக்கு பணம் வாரி வழங்கப்பட்டதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது. சுதந்திரமாக தேர்தலை நடத்திட ஆணையமும், காவல்துறையும் துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை. இதற்கு முன் நடந்த எந்த இடைத்தேர்தலிலும் இப்படி ஒரு கரும்புள்ளியை ஆணையம் பெற்றதில்லை’’ என்றார்.