நாளை காலை 10.30 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…

சென்னை:
நாளை காலை 10.30 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்து உள்ளது.
தமிழக்ததில், குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது. மேலும் வரும் 17ந்தேதியுடன் 3வது கட்ட ஊரடங்கு முடிவடையும் தருவாயில் 4வது கட்ட ஊரடங்கு மேலும் 15நாட்கள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்,  நாளை காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடைப்பெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.