நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை:
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (5-3-2021, வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

அதுபோது மாவட்டக் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மார்ச் 7-ல் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.