நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நாளை ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்து உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ள நிலையில்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை, மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.

கழக தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில், நாளை (03-12-2020) காலை 10 மணியளவில், திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறும்” -கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துஉள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்   3-12-2020 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.  இந்த கூட்டத்தில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம குறிதது விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.