சென்னை:

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெற இருப்பதாக திமுக தலைமைக்கழகம் அறிவித்து உள்ளது.

இன்றுடன் சட்டப்பேரவை மானிய கூட்டத்தொடர் முடிவடைதை தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யும் வகையில் நாளை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச்செயலாளர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறுகிறது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“திமுக மாவட்டச் செய லாளர்கள் கூட்டம், கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 20-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.

இதில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். ‘முரசொலி’ நாளிதழ் பவள விழா, நீட் தேர்வு ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’ தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெறு வதை முன்னிட்டு பவள விழா கொண்டாட முடிவு செய்யப்பட் டுள்ளது.

இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் மாநிலப் பாடத்திட்ட மாணவர் களுக்கு 85 சதவீத இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து ஆலோசனை செய்து செய்து மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்க முடிவு செய்யப்படும் என தெரிகிறது.