நாளை திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்… ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:

திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 16ம் தேதி (நாளை)  காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி,

‘திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 16-07-2020 அன்று காலை 10 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெறும்’, இந்த கூட்டத்தில்  மின்கட்டண உயர்வு தொடர்பாக விவாதிக்கப்படும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.