காவிரி விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும்…ஸ்டாலின்

சென்னை:

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடந்தது. இதை தொடர்ந்து தமிழகத்திலும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசின் நிலைப்பாட்டால் எழுந்துள்ள அசாதாரண சூழல் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமரை சந்தித்து, காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.