சென்னை: பஞ்சமி நில விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறும் ராமதாஸ், சீனிவாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி உள்ளது.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக தமிழக அரசியலில் ஒரு சர்ச்சை எழுந்தது. இந்த விவாகரத்தில், ராமதாஸ், சீனிவாசன் ஆகியோர்மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் சென்னை, 14வது பெருநகர நீதித்துறை நடுவர் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் என்ற முறையிலும்,  வழக்கின் புகார்தாரர் என்ற முறையிலும் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ஆஜராகி சத்திய பிரமாண வாக்குமூலம் கொடுத்தார்.  வாக்குமூலத்துடன் முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல என்பதை தெளிவாக காட்டும் வகையில், நிலத்திற்குண்டான மூல ஆவணங்களையும் கொடுத்து 83 ஆண்டுகளுக்கு உண்டான ஆவணங்களை சமர்ப்பித்தார்.

வழக்கினை விசாரித்த நடுவர் அவர்கள், அடுத்தகட்ட விசாரணைக்காக, வழக்கினை ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இது குறித்து ஆர்/எஸ். பாரதி கூறியிருப்பதாவது:

இதன் பிறகாவது உண்மையை உணர்ந்து ராமதாஸ், சீனிவாசன் ஆகியோர்  மன்னிப்பு கோர வேண்டும். அப்படி கோரும்பட்சத்தில், ஸ்டாலின் ஒப்புதலைப் பெற்று வழக்குகளை திரும்பப் பெற தயாராக இருப்பதாக கூறினார்.