வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக வழக்கு

புதுடெல்லி:

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த சட்டங்களுக்கு எதிராக ஏற்கெனவே காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தற்போது திமுகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். சட்ட ரீதியாக வேளாண் சட்டங்கள் செல்லாது என்று அறிவிக்கக் கோரி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.