வரும் மார்ச் 7ஆம் தேதி திருச்சியில் திமுக கூட்டம் – மு.க.ஸ்டாலின்

சென்னை:
ரும் 7-ஆம் தேதி திருச்சியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. இன்னும் 2 மாதத்தில் ஆட்சி மாற்றம் வர இருக்கிறது. திருச்சியில் வரும் 7 ஆம் தேதி மாநாடுபோல திமுக பொதுக்கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கவுள்ளேன் எனத் தெரிவித்தார்.