சென்னை:

றைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல் இன்று மாலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அன்பழகன் உயிர் நள்ளிரவு 1 மணி அளவில் பிரிந்ததாக அப்போலோ நிர்வாகம் அறிவித்தது. முன்னதாக நேற்று காலை அப்போலோ சென்ற  திமுக தலைவர் முக ஸ்டாலின், அவரது உடல்நிலை குறித்தும் மருத்துவர்கள் ஸ்டாலினிடம் விளக்கினர். செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கண் திறந்து பார்க்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்  இன்று அதிகாலை 1.17 மணிக்கு அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

அங்கு அவரது உடலுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட திமுக நிர்வாகிகள் , மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இன்று மாலை 4.45 மணிக்கு கீழ்ப்பாக்கம் அருகே வேலங்காடு இடுகாட்டில் அன்பழகன்  உடல் தகனம் செய்யப்படுகிறது என்று அவரது குடும்பத்தினர்  தெரிவித்து உள்ளனர்.

அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு மாலை 4 மணிக்கு அன்பழகனின் இறுதி ஊர்வலம், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்கி, இறுதி ஊர்வலம் வேலங்காடு மயானத்தை அடையும். அங்கு மாலை 4:45 மணி அளவில் அடக்கம் செய்யப்படும் என்று திமுக எம்.எல்.ஏ. சேகர் பாபு தெரிவித்துள்ளா