சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தனது சொந்த தொகுதியான வேலூரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை மேல்விஷாரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.