திமுக பொதுச்செயலாளர் தேர்வுக்காக தேதி அறிவிப்பு

சென்னை: 

திமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்வற்காக வரும் 29-ஆம் தேதி திமுக பொதுக் கூட்டம் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1977-ல் தொடங்கி இன்று வரை 43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச்செயலாளர் இருந்த க. அன்பழகன் கடந்த 7-ஆம் தேதி காலமானார். அன்பழகன் மறைவை தொடர்ந்து அவரது படத்திறப்பு விழா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.

திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் மறைவை தொடர்ந்து, கட்சியில் மூத்த நிர்வாகியான துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆவது உறுதி என்று கட்சி நிர்வாகிகள் தரப்பில் பேசப்படுகிறது.

இந்நிலையில், திமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்வற்காக வரும் 29-ஆம் தேதி திமுக பொதுக் கூட்டம் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 29-ஆம் தேதி காலை பத்து மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் எனது தலைமையில் நடைபெறும் என்றும். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தராமல் கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


பேராசிரியர் உடல் நலிவுற்று இருந்த தருணத்திலேயே கட்சியின் நலன் கருதி, பொதுச்செயலாளரின் அதிகாரங்கள் சில தலைவருக்கு மாற்றப்பட்டுவிட்டன. கட்சியில் 2-வது பதவி என்றாலும், மற்ற கட்சிகளை ஒப்பிடுகையில் இன்னமும் அது அதிகாரம் மிக்கப் பதவிதான். கட்சி முழுமையாக மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இயங்குவதால், இந்தப் பதவிப் பரிமாற்றங்களில் பெரிய சர்ச்சைகளுக்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.