அண்ணா அறிவாலயத்தில் வரும் 14ந்தேதி பேராசிரியர் உருவப்படம் திறப்பு!

சென்னை:

றைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உருவப்படம் வரும் 14ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது.‘

வயது முதிர்வு காரணமாக கடந்த 7ந்தேதி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையொட்டி, அவரது படத்திறப்பு நிகழ்ச்சி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

வரும் 14ந்தேதி மாலை 5 மணி அளவில் திக தலைவர் வீரமணி முன்னிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அவர்களின் திருவுருவப் படத்தினை திறந்து வைக்கிறார்.