Random image

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறை ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை திமுக தலைவர் ஸ்டாலின், துரை முருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

anpazhagan

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் க.அன்பழகன்(96) வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அன்பழகன் திமுகவின் முக்கிய நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் மூச்சு திணறல் கராணமாக அனுமத்திக்கபட்ட அன்பழகன் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றபட்டுள்ளார்.

தற்போது அவர் நலமுடன் இருப்பதாக திமுக துணை பொதுசெயலாளர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.