திமுக பொதுக்குழு ஒத்திவைப்பு! அன்பழகன் அறிவிப்பு

சென்னை,

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் நடைபெற இருந்த திமுக பொதுக்குழு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கருணாநிதி தலைமையில் வருகிற 20-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைத் தொடர்ந்து தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தலைவர் கலைஞர் தலைமையில் 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுவதாக இருந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் தலைவர் கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காரணத்தால் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.