ராணிப்பேட்டை

மிழக மக்கள் விரும்பும் அரசாக திமுக அரசு அமையும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடந்து வருகிறது.  திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்னும் தலைப்பின் கீழ் மாநிலம் எங்கும் ஒவ்வொரு இடமாக பிரசாரம் செய்து வருகிறார்.  ஆங்காங்கே பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வரும் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

அவ்வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வில் பங்கேற்று கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.  அவர் தனது உரையில், “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக் கடன் விவசாயக்கடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும்.   நீட் தேர்வை திமுக ஆட்சியில் இருந்த வரை அனுமதிக்காமல் இருந்தது.

ஆனால் அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து நீட் தேர்வுக்கு அனுமதி அளித்துள்ளது.  திமுக அட்சி அமைந்த உடன் நீட் தேர்வுக்கு விலக்கு பெறத் தேவையான நடவடிக்கைகளை உறுதியாக எடுக்கும்.   மக்கள் விரும்பும் அரசாக விரைவில் தமிழகத்தில் திமுக அரசு அமையும்.  அதன் பிறகு 100 நாட்களில் கோரிக்கை மனுக்களுக்குத் தீர்வு காணப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.