ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் தொடங்கியது: நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை?

சென்னை:

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் தொடங்கியது. இதில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வியூகம் அமைப்பது குறித்து திமுக உயர்நிலை செயற்திட்டக்குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இன்று காலை சுமார் 10.15 மணியளவில் கூட்டம் தொடங்கியது.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி உள்பட 24 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில், தேர்தல் கூட்டணி,  அதிமுக மற்றும் பாஜகவை எதிர்கொள்வது குறித்தும், தொகுதி வாரியாக களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகளை முடுக்கி விடுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மேலும் விரைவில் நடைபெற உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.