தூத்துக்குடியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமான மே தினப் பேரணி…

தூத்துக்குடி:

ன்று ஓட்டப்பிடாரத்தில் சட்மன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  மே தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற மே தினப் பேரணியில் கலந்து கொண்டார். இதில். ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி அண்ணா நகரில் தொடங்கிய மே தினப் பேரணி முக்கிய சாலைகள் வழியாகச் சென்று சிதம்பர நகர் மைதானத்தில் நிறைவடைந்தது. முக ஸ்டாலின் பேரணியில் நடந்து முன்னே செல்ல, அவரது பின்னால் ஏராளமான திமுக தொண்டர்கள்  பின் தொடர்ந்தனர்.

அங்குள்ள மே தின நினைவுத்தூணில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்,  சிதம்பர நகர் மைதானத் தில் நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, தி.மு.க. தான் தொழிலாளர்களின் காவலாளியாக செயல்பட்டு வருவதாகவும், மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களின் உரிமையை நசுக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். தொழிலாளர் தோழர்களுக்கும், விவசாயிகளுக்கும் 23-ஆம் தேதி பிறகு விடிவுகாலம் பிறக்கும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த பேரணியில் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி உள்பட திமுக முன்னணியினர் உடனிருந்தனர்.