நாளை தி.மு.க. ஆலோசனை கூட்டம்

சென்னை:

18 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், நாளை தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களை இன்று சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இது அரசியல்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சபாநாயகரின் முடிவைக் கண்டித்தும் வரவேற்றும் அரசியல் தலைவர்கள் பலர் அறிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தி.மு.க. செயல்தலைவர் முக.ஸ்டாலின் இது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியானது. பிறகு மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். தற்போது, நாளை மாலை ஐந்து மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமையகம் அறிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி