சென்னை:  தமிழகஅரசின் இடஒதுக்கீட்டின்படி மருத்துவம் படிக்க இடம்பெற்ற 7 மாணவிகளின் 5 ஆண்டு கல்விச்செலவை ஏற்பதாக திமுக அறிவித்து உள்ளது.

தமிழக அரசு நடப்பாண்டு, நீட்தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம்கிடைக்கும் வகையில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தது.  இதன் காரணமாக சுமார் 400 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி உள்ளனர்.

இதற்கிடையில், அரசு கல்லூரிகள் போக தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம்பிடித்துள்ள அரசு பள்ளி மாணாக்கர்களின் கல்விச்செலவை அரசு ஏற்பதாக அறிவித்து. அதுபோல திமுகவும் அறிவித்தது. இந்த நிலையில்,  அரசின்  7.5% உள் இடஒதுக்கீட்டின்படி இடம்பெற்ற 7  அரசு பள்ளி மாணவியரின் ஐந்து ஆண்டுகால முழு கல்விச்செலவை திமுக ஏற்பதாக அறிவித்து உள்ளது.

இதையடுத்து,  மருத்துவப்படிப்புக்கு தேர்வாகியுள்ள அரசு பள்ளி மாணவிகள் 7பேரை அண்ணாஅறிவாலயம் வரவழைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவர்களின் 5 ஆண்டு கல்விச்செலவை,  திமுக வர்த்தகர் அணி ஏற்கும்என்று  தெரிவித்தார். அதற்கான பொறுப்பை   திமுக  மாநில வர்த்தகர் அணி துணைத்தலைவர் திரு. எஸ்.அய்யாத்துரை பாண்டியனிடம் வழங்கினார்.