மதுரை: அதிமுக தான் பாஜகவின் பி டீம் என்று கனிமொழி கடுமையாக விமர்சித்து உள்ளார்.

மதுரையில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவின் அனைத்து அறிக்கைகளும் வெற்று அறிக்கையாக இருந்திருக்கிறது. அதேபோல தான் வங்கி கடன் அறிக்கையும் வெற்று அறிக்கையாகவே இருக்கும்.

திமுகவில் கூட்டணி தொடரும். மாற்றங்கள் இருந்தால் கட்சி தலைமை முடிவு எடுக்கும். அழகிரி குறித்து கருணாநிதி எடுத்த நிலைப்பாடு தான். தற்போது வேறு முடிவு எடுக்கவேண்டிய நிலை இருந்தால் அதை திமுக தலைவர் எடுப்பார் என்றார்.

திமுகவின் “பி” டீம் தான் சசிகலாவும், டிடிவி தினகரனும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், திமுகவிற்கு எந்த பி டீம் தேவையில்லை. அதிமுக பாஜக பி டீமாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.