கிறிஸ்தவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஈஸ்டர் வாழ்த்து…

சென்னை:

கிறிஸ்தவர்களின் பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில்,
கிறிஸ்தவ மக்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடும் சோதனைகளையும், காரிருளையும் வெற்றி கண்ட இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு வாழ்த்துக்கள். சுய பாதுகாப்புடன் ஈஸ்டர் திருநாளை கொண்டாடுங்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.