கட்சிகள் பரஸ்பரம் குற்றம் சாட்டுவது வாடிக்கை: அமைச்சர் வேலுமணி வழக்கில் ஸ்டாலினுக்கு தடை விதிக்க நீதி மன்றம் மறுப்பு

சென்னை:

னது நற்பெயருக்கு களங்கம் வரும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாகவும், அதற்கு தடை விதிக்க கோரியும் அமைச்சர் வேலுமணி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் மனுவை விசாரித்த நீதிபதி, தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் பரஸ்பரம் குற்றம் சாட்டுவது வாடிக்கை யானதுதான், இதற்காக ஸ்டாலினுக்கு  பேச தடை விதிக்க முடியாது என்று அதிரடியாக கூறி உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருவதுதான் நடைபெற்று வருகிறது. எந்தவொரு கட்சியும் தங்களது சாதனைகள் குறித்து பேசுவதை தவிர்த்து, தனிநபர் விமர்சனங்கள் மேலோகி வருகிறது.

இந்த நிலையில், பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து பேசிய ஸ்டாலின்,  அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ழகூறிய நிலையில், பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பார் நாகராஜுக்கும், அமைச்சர் வேலுமணிக்கு தொடர்புகள் இருப்பதாக கூறியிருந்தார்.

இநத நிலையில்,  ஸ்டாலின் பேசியது உண்மைக்கு புறம்பானவை எனவும், தேர்தல் நேரத்தில் இப்படி பேசுவது விதிமுறை மீறல், ஸ்டாலின் தன்மீது அபாண்டமாக பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று  அமைச்சர் வேலுமணி உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை  விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தேர்தல் நேரத்தில் பிரச்சாரங்களில் இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டுவது வாடிக்கை தான். எனவே ஸ்டாலினுக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து ஸ்டாலின் பதில் மனு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.