சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி,  மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். அதைத்தொடர்ந்து, கோபாலபுரம் இல்லத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் வாக்குச்சாடிவடிக்கு தனது குடும்பத்தினருடன்   சென்ற மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் நீண்டநேரம் வரிசையில் நின்று, தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் வாக்களித்தார்.
வாக்கு செலுத்திய பிறகு செய்தியளார்களை சந்தித்த ஸ்டாலின்,  மக்கள் மனநிலை ஆளும் கட்சிக்கு எதிராக உள்ளது. தோல்வி பயம் காரணமாக தேர்தலை நிறுத்த அதிமுகவினர் முயன்றனர். தேர்தல் ஆணையம் அதை மறுத்துவிட்டது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு முழு திருப்தியும் அல்ல, அதிருப்தியும் அல்ல”   என தெரிவித்தார்.
வாக்குப்பதிவு குறித்து மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
தமிழகம் முழுவதும் மக்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியடையச் செய்கிறது. எங்கள் குடும்பத்தில் அனைவரும் வாக்களித்தோம்! தேர்தல் ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கும் வரலாற்றை மாற்றி எழுதும்!

எனவே கட்டாயம் #வாக்களிக்கவும்  #COVID19 முன்னெச்சரிக்கை அவசியம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.