பொதுமக்கள் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:
தொற்று அறிகுறி இருப்பவர், இல்லாதவர் என்ற பேதம் பார்க்காமல் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா ஒழிப்பு பணியில், தமிழக அரசுக்கு ஆலோசனைகள் எதுவும் கூற வில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த குற்றச்சாட்டை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கொரோனா கள நிலவரம் தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ள மு.க.ஸ்டாலின், தமிழக அரசுக்கு தெரிவித்திருந்த ஆலோசனைகளை பட்டியலிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி