ஜோ பிடன், கமலா ஹாரிசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!

சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன், கமலா ஹாரிசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து கூறி உள்ளனர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது: அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடனுக்கும், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிசுக்கும் வாழ்த்துகள்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் தமிழ்ப் பாரம்பரியத்தை சேர்ந்த பெண் ஒருவரை துணை அதிபராக அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.