திமுக தலைவர் ஸ்டாலின்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து

சென்னை:

திமுக பொதுக்குழுவில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக  தேர்ந்தெடுக்கப்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

திமுக தொடங்கியதில் இருந்து  தலைவராக கருணாநிதி இருந்து வந்த நிலையில், அவரது மறைவுக்கு பிறகு, சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2வது தலைவரக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2019ம் ஆண்டு நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், திமுக தலைவராக ஸ்டாலின் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அவருக்கு நாடு முழுவதும் இருந்து தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,  தனது அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குகையில் அவர் மகிழ்ச்சியையும் வெற்றியும் பெற விரும்புகிறேன் என்று வாழ்த்தி உள்ளார்.

மம்தா பானர்ஜி

தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ள ஸ்டாலினுக்கு  மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டர் வாழ்த்துச் செய்தியில்,  “ திமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.