சென்னை: ஆன்மிகத்தை காரணம் காட்டி திமுகவை வீழ்த்தலாம் என சிலர் நினைக்கின்றனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அவர் சிறப்பு பொதுக்கூட்டங்களை நடத்துகிறார். அதன்படி, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் காணொளி வழியே அவர் இன்று பேசினார்.

அப்போது ஸ்டாலின் கூறியதாவது: ராமநாதபுரத்தில் குடிநீர் திட்டத்தை திமுக தான் நிறைவேற்றியது.  திமுகவை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது. ஆன்மிகத்தை காரணம் காட்டி வீழ்த்தலாம் என சிலர் நினைக்கின்றனர்.

மக்களுக்கு சேவை செய்வதுதான் மகத்தான ஆன்மிகம் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். ஏழைகளை காக்க கூடியவர்கள்தான் உண்மையில் ஆன்மிகத்தை நேசிப்பவர்கள்.  ஏழைகள் முன்னேற்றத்திற்கு உருவாக்கப்பட்ட கட்சி திமுக என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.