சென்னை: வரும் 23ம் தேதி முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடி தேர்தல பிரச்சாரம் செல்ல உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் கலந்துரையாடல் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் டிஆர் பாலு, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்தில் வரும் 23ம் தேதி முதல் திமுக தலைவர் ஸ்டாலின் நேரடி தேர்தல பிரச்சாரம் செல்ல உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். டிசம்பர் 23 முதல் ஜனவரி 10 வரை 16,000 கிராம சபை கூட்டங்களை மீண்டும் திமுக நடத்த உள்ளதாக மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஒவ்வொருவரும், வார்டு, வார்டாக சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் திமுகவின் சட்டசபை தேர்தல் பிரச்சார வீடியோ வெளியிடப்பட்டது.

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் குறைகளை எடுத்துரைத்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் வகையில் இந்த வீடியோவை திமுக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் வெளியிடப்படு உள்ளது.