பசும்பொன்னில் தேவர்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின்…

மதுரை:  விடுதலைப் போராட்ட வீரரான பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, அவரது சமாதி அமைந்துள்ள கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சித்தலைவர்களும் கலந்துகொண்டனர்.

முன்னதாக இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,.

இதுகுறித்து ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  விடுதலைப் போராட்ட வீரரான தேவர் பெருமகனார் ஜெயந்தி தினமான இன்று, பசும்பொன் வந்து அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது மகிழ்வளிக்கிறது! தமிழ்ப்பற்று, விவசாயிகள் நலன், சமுதாய ஒற்றுமைக்காகப் பாடுபட்ட அவர் காட்டிய பொதுவாழ்வில் தூய்மையை மீட்டெடுக்க #தேவர்ஜெயந்தி-யில் உறுதியேற்போம்!

விடுதலைப் போராட்ட வீரரான தேவர் பெருமகனார் ஜெயந்தி தினமான இன்று, பசும்பொன் வந்து அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது மகிழ்வளிக்கிறது! தமிழ்ப்பற்று, விவசாயிகள் நலன், சமுதாய ஒற்றுமைக்காகப் பாடுபட்ட அவர் காட்டிய பொதுவாழ்வில் தூய்மையை மீட்டெடுக்க #தேவர்ஜெயந்தி-யில் உறுதியேற்போம்!  என கூறியுள்ளார்.