தமிழர் உணர்வுடன் விளையாடினால் சிறு பொறிகள் தீப்பிழம்பாகிவிடும்: ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: தமிழர் உணர்வுடன் விளையாடினால் சிறு பொறிகள் தீப்பிழம்பாகிவிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கியில், இந்தி தெரிந்தால் தான் கடன் கொடுப்பதாக கூ ற இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் திருச்சிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

இந் நிலையில், தமிழர் உணர்வுடன் விளையாடினால் சிறு பொறிகள் தீப்பிழம்பாகிவிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

இந்தி தெரியாவிட்டால் வங்கிக் கடன் கிடையாதா? – ஜெயங்கொண்டம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரியொருவர் ஓய்வு பெற்ற மருத்துவரிடம் ஆணவத்தைக் காட்டியிருக்கிறார். இந்தி வெறியை வளர்த்தெடுப்பது பேரபாயம். தமிழர் உணர்வுடன் விளையாடினால் சிறு பொறிகள் தீப்பிழம்பாகிவிடும். எச்சரிக்கை என்று பதிவிட்டுள்ளார்.