மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் நலம்பெற வேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவரத்தை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறி உள்ளார். இந் நிலையில், நிதின் கட்கரி பூரண உடல்நலம் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது: நிதின் கட்கரி கொரோனாவிருந்து விரைவாக குணமாகி, பூரண உடல்நலன் பெற விரும்புகிறேன் என்று கூறி உள்ளார்.