அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை!

சென்னை:

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் பொதுக்குழு முடிந்ததும், மெரினா கடற்கரையில் உள்ள  மெரினாவில் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களிலும், பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

திமுக தலைவர் கருணாநிதியை மறைவை தொடர்ந்து திமுக தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதுபோல கட்சியின் பொருளாளராக முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் தேர்வானார்.

இந்த நிலையில் இன்று கூடிய திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் தலைவராக தேர்ந்தடுக்கப்பட்டதாக , கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார். துரைமுருகனும்  ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தலைவர் பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் பொதுக்குழு கூட்டத்தில் நெகிழ்ச்சியுடன் உரையாற்றி னார்.  பொதுக்குழு கூட்டம் முடிவடைந்ததும், திமுக தலைவரான ஸ்டாலின்  மெரினா விரைந்தார். அங்கு  அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்திலும் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் அவர். திமுக பொருளாளராகப் பொறுப்பேற்றுள்ள துரைமுருகனும், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.

இதன்பிறகு, வேப்பேரியில் பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

ஸ்டாலின் இன்று திமுக தலைவராக பதவி ஏற்பதை தொடர்ந்து கருணாநிதி சமாதி வித்தியாசமாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பூங்களால் அலங்கரிக்கப்பட்ட சமாதியில், கருணாநிதியின் கண்ணாடி போன்ற உருவமும், கருணாநிதியின் பேனா போன்ற உருவங்களும் அமைக்கப்பட்டிருந்தது. இது காண்போரை கவர்ந்திழுத்தது.

ஏற்கனவே கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டபோது,  அவர் பெரிதும் விரும்பும் முரசொலி நாளிதழ்  கண்ணாடி பெட்டியில் தலைமாட்டில் வைக்கப்பட்டது.  அதுபோல தினந்தோறும் முரசொலி நாளிதழ் கருணாநிதி சமாதியில் வைக்கப்பட்டு வருகிறது.

கருணாநிதி என்றாலே நினைவுக்கு வருவது அவரது கறுப்பு கண்ணாடியும், போனவும்தான். அதை போற்றும் வகையில், கருணாநிதியின் சமாதியில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதில்,  பிரம்மாண்டமான கருப்பு மூக்கு கண்ணாடியும் பெரிய பேனாவும் வைக்கப்பட்டுள்ளது.

அதனுள், ஒரு பேப்பரில் கருணாநிதியே எழுதியது போல் உழைப்பு உழைப்பு உழைப்பு அதுதான் ஸ்டாலின் என்று எழுதப்பட்டு “மு.க” என கையெழுத்திட்டிருந்தது.