மனைவி துர்காவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் திடீர் சிங்கப்பூர் பயணம்

சென்னை:

திமுக தலைவரும்,தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் திடீரென 5 நாள் பயணமாக சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், உதவியாளர் ராஜா சங்கரும் சென்றுள்ளார்கள்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்ற தால், கடந்த சில மாதங்களாக அயராது தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்த திமுக தலைவர், தேர்தலில் அமோக வெற்றியையும் அறுவடை செய்துள்ளார்.

இந்த நிலையில், 5 நாள் பயணமாக ஸ்டாலின் திடீரென பயணமாகி உள்ளார். தமிழக சட்டமன்றம்
எந்த நேரத்திலும் கூடும் வாய்ப்பு உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து இருப்பதாலும், ஸ்டாலின் திடீர் பயணம் பல்வேறு யூகங்களை எழுப்பி உள்ளது.

ஸ்டாலின் ஓய்வு எடுக்கவே சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.