கொரோனாவில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து…!

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரைவில் குணமடைய திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கூறி இருப்பதாவது: இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து பாதுகாப்பாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.