ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் பகல் 12.40 நிலவரப்படி திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக தேர்தல் நடந்தது. முதற்கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகள்  பதிவானது. இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகள் பதிவானது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு.  315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பகல் 12.40 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு பொறுப்புகளில் திமுக 65 இடங்களிலும், அதிமுக 28 இடங்களிலும், பாமக 4 இடங்களிலும், அமமுக 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. அதேநேரம், மொத்தம் உள்ள 5,067 ஊராட்சி ஒன்றிய வார்டு பொறுப்புகளில் 99 இடங்களில் திமுகவும், 77 இடங்களில் அதிமுகவும், 3 இடங்களில் தேமுதிகவும், 2 இடங்களில் அமமுகவும் முன்னிலை வகித்து வருகின்றன.