காஷ்மீர் அந்தஸ்து விவகாரம்: திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் டில்லியில் ஆர்ப்பாட்டம்

டில்லி:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, தலைநகர் டில்லி ஜந்தர் மந்திரில் திமுக தலைமையில் எதிர்க்கட்சியினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மோடி தலைமையிலான 2வது முறையாக பதவி ஏற்ற நிலையில், பல்வேறு சட்டத்திருத்த மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. அதன்படி சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370, 35ஏ-வை ரத்து செய்து மாநிலத்தை 3 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதுகுறித்து நாடாளுமன்ற இரு அவைககளிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெற்றதுடன் ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்று அரசிதழிலும் வெளியிட்டு உள்ளது.

மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து தெரிவித்து வரும் நிலையில், திமுக போராட்டத்தை அறிவித்தது. அதன்படி டில்லி ஜந்தர்மந்திரில் இன்று காலை திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், திமுக எம்.பி.க்களுடன் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் , பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது,  ஜம்மு-காஷ்மீரில் வீட்டு சிறையில் இருக்கும் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது.