சென்னை

திமுக வின் மக்களவை தலைவராக டி ஆர் பாலுவும் துணை தலைவராக கனிமொழியும் தேர்வு செய்யபப்ட்டுள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒரு தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. போட்டியிட்ட 38 தொகுதிகளில் 37 தொகுதிகளின் வென்ற இந்த கூட்டணி தேனி தொகுதியில் மட்டும் வெற்றி வாய்ப்பை அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரிடம் தவற விட்டது.

இன்று திமுக தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து மக்களவை உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர். அந்த கூட்டத்தில் திமுகவின் மக்களவை தலைவர், துணைத்தலைவர், கொறடா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திமுகவின் பாராளுமன்ற மக்களவை தலைவராக டி ஆர் பாலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏ ராஜா திமுகவின் கொறடாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திமுகவின் பாராளுமன்ற மாநிலங்களவை தலைவராக திருச்சி சிவா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   மாநிலங்களை கொறடாவாக டி கே எஸ் இளங்கோவந் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.