நாளை திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம்: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு

சென்னை:

டைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. 20 இடங்களில் போட்டியிட்ட திமுக அனைத்து இடங்களையும் கைப்பற்றி உள்ளது.

இதையடுத்து,  திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில்  நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும்  என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.