ஜெயலலிதாவின் போலி கைரேகை பதிவு விவகாரம்: சிபிஐ.யிடம் திமுக எம்எல்ஏ புகார் மனு

டில்லி:

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போலி கைரேகை பதிவு விவகாரம் குறித்த தகுந்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐ.யிடம் திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன் புகார்  புகார் மனு கொடுத்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி, திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ டாக்டர்.சரவணன், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார்.

மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலிதா நோய்வாய்ப்பட்டுகடந்த 2016ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தேர்தலின் போது அப்போலோ மருத்துவமனையில் அனமதிக்கப்பட்டிருந்தார். அந்தநேரத்தில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், அதிமுக சார்பில் வழங்கப்பட்ட வேட்புமனுவின், பி வடிவத்தில், ஏ.கே.போஸ் வேட்பாளராக முன்மொழியப்பட்டு, அதில் ஜெயலலிதா கைரேகை இடப்பட்டிருந்தது.

சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா எப்படி கைரேகை வைத்திருக்க முடியும் என்று திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவின் கைரேகை சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், சட்டவிரோதமானது என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், திமுக எம்எல்ஏ சரவணன், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு சென்று, ஜெயலலிதா போலி கைரேகை தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்  மனு கொடுத்துள்ளார். அந்த  மனுவில், முறைகேடாக பெறப்பட்ட ஜெயலலிதா கைரேகையை அங்கீகரிக்கச் செய்த அப்போதைய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவராவ், தேர்தல் நடத்திய அதிகாரி ஜீவா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மருத்துவர் பாலாஜி, அப்பல்லோ மருத்துவர்கள் பாபு, ஆப்ரஹாம், மற்றும் சசிகலா, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இது அதிமுக வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி