திமுக சட்டமன்ற உறுப்பினர் மா சுப்ரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா சுப்ரமணியனுக்கும் அவர் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறையாமல் உள்ளது.

இந்த பாதிப்பு பல அரசியல் மற்றும் கலை உலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரையும் விட்டு வைக்காமல் உள்ளது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், காங்கிரஸ் எம்பி வசந்தகுமார், பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆகியோர் கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளனர்.

இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மா சுப்ரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆனதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் அவர் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.