செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தானுக்கு கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை: கொரோனாவால் 3 திமுக எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டு அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 4வதாக ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட அவர் சிகிச்சையில் உள்ளார்.

செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந் நிலையில் தற்போது செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தானுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.