திமுக எம்.எல்.ஏ. மதிவாணனுக்கு கொரோனா…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 2 எம்எல்ஏக்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  சீர்காழி அதிமுக எம்எல்ஏக்கு தொற்று உறுதியான நிலையில், தற்போது திமுக எம்எல்ஏ மதிவாணனுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

கொரோனா வைரசின்  தாக்கத்தால் கொரோனா களப்பணியில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என அரசியல் தலைவர்கள் என பலருக்கும் தொற்று உறுதியாகி வருகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இரண்டு எம்.எல்.ஏ.களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்,  கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.களின் எண்ணிக்கை 36- ஆக அதிகரித்துள்ளது.