திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு விரைந்து நலம் பெற விழைகிறேன்… ஸ்டாலின்

--

சென்னை:

திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு விரைந்து நலம் பெற விழைகிறேன் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தொகுதி தி முக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதி யாகி உள்ளது.  இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், அவர் குணமடைந்து மீண்டும் வழக்கம்போல பணியாற்ற வருவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  #Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கழகத்தின் செய்யூர் MLA ஆர்.டி.அரசு அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன். மக்கள் பணியில் அவருக்குள்ள அக்கறையும், தன்னம்பிக்கையும், தொடர்ந்து மேற்கொண்டு வரும் சிகிச்சையும் அவரை மீண்டும் வழக்கம்போல பணியாற்றச் செய்திடும்!

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.