திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா…

சென்னை:

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  இதை யடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கொரோனா தொற்றால் ஏற்கனவே திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பலியான நிலையில், அதிமுக எம்எல்ஏ பழனி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

மேலும் ஏராளமான பொதுமக்கள் மட்டுமின்றி  மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் என அனைத்து தரப்பினரையும் கொரோனா தொற்று பாதித்து வருகிறது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரசுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது; அவர் சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.