கலெக்டரை மிரட்டிய வழக்கு: செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமின்…

சென்னை:

ரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியது தொடர்பான வழக்கில், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதி மன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது.

திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி மாவட்ட ஆட்சியரை  வெளியில் நடமாட முடியாது பகிரங்கமாக மிரட்டியது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து செந்தில் பாலாஜி மீது கொலை மிரட்டல் விடுத்தல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வந்த நிலையில்,  செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரிய மனு மீது விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவாத மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும்,  கரூர் சிபிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் நிபந்தனை வைத்துள்ளது.