கேரள வெள்ளம்: திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் ஒருமாத சம்பளம் நிதி நிவாரணம்

சென்னை:

ழை வெள்ளத்தால் கோரமாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு திமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்குவார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

கேரளாவில் வரலாறு காணாத பேய் மழை காரணமாக மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தம், பல இடங்களில் சாலைகள் அரிக்கப்பட்டு, வீடுகள்,   உடை மற்றும் உணவுக்கும் வழியின்றி பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.   இவர்களுக்கு உலகெங்கிலும் இருந்து நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி நிதி உதவிஅளிப்பதாக அறிவித்து உள்ளது. அதுபோல தமிழக அரசு சார்பில், ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்ட நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத சம்பவளத்தை வழங்குவதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், திமுக சார்பில் கேரள நிவாரண நிதியாக ஒரு கோடி வழங்கப்பட்ட நிலையில், தற்போது, கேரளாவுக்கு உதவிடும் வகையில்,  திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவர் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.